மரத்தை கட்டித் தழுவ ரூ.1500 - பெங்களூரு கப்பன் பார்க்கில் நூதன வியாபாரம்!
பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் காடுகளை அழைத்து சென்று அங்குள்ள மரங்களை கட்டித் தழுவுவதற்கு ரூ.1500வரை வசூல் செய்துள்ளது.
இங்கே எல்லாமே வியாபாரம்தான். உணவுப் பொருள் முதல் வீணாக வெளியில் தூக்கி எறியப்படும் பொருள் வரை எல்லாமே விற்பனை செய்யப்படுகின்றன. அடுப்பு எறிக்க பயன்படும் மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட எறிகட்டி வரை இன்று ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கிறது.
தண்ணீர் ஒரு லிட்டர் ரூ.200க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? சுத்தமாக ஆக்சிஜன் காற்று விற்பனை செய்யப்படும் என நினைத்துக் கூட பார்க்க முடிகிறதா.? இங்கு எல்லாமே நைஜீரியன் காமெடியில் வரும் சிறுவன் பாவ்பாவின் மொழிகளில் சொல்வதானால் "திஸ் இஸ் பிசினஸ்” என்பதாகும்.
இந்த நிறுவனத்தின் மூலம் கடுமையான பணிச் சூழலில் பணிபுரியும் பணியாளர்களின் மன அழுத்தங்களை குறைக்கவும், ஆறுதல் மற்றும் மன அமைதியை ஏற்படுத்தவும் அவர்கள் பெங்களூருவில் உள்ள கப்பன் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்குள்ள பூங்காவில் அவர்கள் மரங்களை கட்டித் தழுவ ரூ.1500 வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
https://x.com/AJayAWhy/status/1780167988504625242
இந்த வித்தியாசமான நிகழ்ச்சி குறித்து இதனை ஒருங்கிணைக்கும் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்படி எழுதியுள்ளது.
"நகரத்தில் நமது அன்றாட வாழ்க்கை மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து விலகி மன அமைதியை தருகிற விதமாக இயற்கையுடன் மீண்டும் இணைவதற்கான நேரத்தையும் இடத்தையும் கண்டுபிடிப்பது நகரத்தில் மிகவும் சவாலான ஒன்று. இதற்குத்தான் ஜப்பானியக் கலையான வனக் குளியல் என்பது ஒரு நல்ல அனுபவமாகும். இது காடுகளுக்குள் ஒரு ஆழ்ந்த, அமைதியான மற்றும் ஆத்மார்த்தமான நடைப்பயிற்சியாகும். இதன்மூலம் நீங்கள் புத்துணர்வுடன் இருப்பதைப் போல் உணர்வீர்கள் “ என இந்த நிகழ்வைப் பற்றி எழுதியுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தள பயனாளர்கள் சிலர் புதிய வகையான மோசடி என குறிப்பிட்ட இந்த நிகழ்வின் விளம்பரங்களை பகிர்ந்துள்ளனர்.