Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குஜராத் அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

குஜராத் கடற்பகுதி எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
03:13 PM Aug 24, 2025 IST | Web Editor
குஜராத் கடற்பகுதி எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
Advertisement

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கடற்பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்போது இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பாகிஸ்தான் மீனவர்கள் இருப்பது தெரிய வந்தது.

Advertisement

இதையடுத்து 15 பாகிஸ்தான் மீனவர்களை படகுடன் சேர்த்து எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும் படகில் சுமார் 60 கிலோ மீன்கள், 9 மீன்பிடி வலைகள், டீசல், உணவுப் பொருட்கள், ஐஸ், மரக்குச்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் பாகிஸ்தான் நாணயத்தில் ரூ.200 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான மீனவர்கள் ​​பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சுஜாவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.தொடர்ந்து அந்த மீனவர்களிடம் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
BSFgujratIndiaNewslatestNewspakistanfishermen
Advertisement
Next Article