Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் - #TNGovt உத்தரவு!

09:55 PM Sep 30, 2024 IST | Web Editor
Advertisement

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

சென்னையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து, துரிதப்படுத்தி, கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி, திருவொற்றியூர் பகுதிக்கு சமீரன், மணலி பகுதிக்கு குமரவேல் பாண்டியன், மாதவரம் பகுதிக்கு மேகனாத ரெட்டி, தண்டையார்பேட்டை பகுதிக்கு கண்ணன், ராயபுரம் பகுதிக்கு ஜானி டாம் வர்கீஸ், திரு.வி.க நகர் பகுதிக்கு கணேசன், அம்பத்தூர் பகுதிக்கு ராமன், அண்ணாநகர் பகுதிக்கு ஸ்ரேயா சிங், தேனாம்பேட்டை பகுதிக்கு பிரதாப், கோடம்பாக்கம் பகுதிக்கு விசாகன், வலசரவாக்கம் பகுதிக்கு சிவஞானம், ஆலந்தூர் பகுதிக்கு பிரபாகர், அடையார் பகுதிக்கு செந்தில் ராஜ், பெருங்குடி பகுதிக்கு மகேஷ்வரி ரவிகுமார், சோழிங்கநல்லூர் பகுதிக்கு உமா மகேஸ்வரி ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
ChennaiChennai rainsIASNews7TamilNorth East MonsoonTN GovtTn Rains
Advertisement
Next Article