Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்தநாள் விழா - தவெக தலைவர் விஜய் புகழாரம்!

பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
11:54 AM May 23, 2025 IST | Web Editor
பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
Advertisement

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அந்த பதிவில், "தமிழ் நிலத்தில் போரில் வென்ற மன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். அக்காலத்தில், தன்னுடைய போர்த்திற வெற்றியைத் தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து, போருக்குச் செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர்.

தோல்வியே காணாத வரலாற்றுச் சிறப்புமிக்க வாகை நாயகர். அரசர்களுக்கு எல்லாம் பேரரசராகத் திகழ்ந்த அரச வாகை கொண்ட பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாளில், தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் அவர் ஆற்றிய சேவைகளைப் போற்றி மகிழ்வோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
birth anniversaryPerumpidugu Mutharayatributetvkleadervijay
Advertisement
Next Article