Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் இந்தியா உள்பட 7 நாடுகளில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பு! மருத்துவ ஆய்வில் தகவல்!!

09:11 AM Nov 18, 2023 IST | Web Editor
Advertisement

புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுதோறும் இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement

உலகம் முழுவதும் ஏற்படும் புற்றுநோய் உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டோா் இந்த 7 நாடுகளைச் சோ்ந்தவா்களாவர்.

‘லான்செட்’ மருத்துவ ஆய்விதழ் இதுதொடா்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சிகரெட், மதுபானம், உடல் பருமன், பால்வழி நோய்த் தொற்று (ஹெச்பிவி) ஆகியவற்றால் ஆண்டுக்கு 20 லட்சம் போ் உயிரிழக்கின்றனா். இதில் புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுகிறது. கா்ப்பப்பை வாய் புற்றுநோயால் உலகம் முழுவதும் 2 நிமிஷங்களுக்கு ஒருவா் உயிரிழந்து வருகின்றனா். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இது 90 சதவீதம் உள்ளது. இந்தியாவில் ஆண்களில் பெரும்பலானவா்களுக்கு தலை, கழுத்துப் பகுதி புற்றுநோயாலும் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயாலும் உயிரிழக்கின்றனா்.

மற்ற நாடுகளில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் குறைவாக உள்ளன. புகைப்பழக்கம், மதுபானம் அருந்துவதாதல் உயிரிழப்பில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சீனா, இந்தியா, ரஷியாவில் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட 9 மடங்கு அதிகமாக உள்ளது. உடல் பருமன், பாலியல் வழி நோய்த் தொற்று புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
cancerdeathDeath Rationews7 tamilNews7 Tamil UpdatesStudy
Advertisement
Next Article