Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்!

10:27 PM Jun 13, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

தமிழ்நாட்டில் அடிக்கடி ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று சென்னையில் 40 காவல் ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து இன்று 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் விவரம்

இதன்படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக உள்ள ரீதா ஹரிஷ் தாகூர் ஐ.ஏ.எஸ், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

பொது மற்றும் மறு வாழ்வுத்துறை செயலாளராக உள்ள கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ், மனிதவள மேலாண்மை துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ்.நாகராஜன் ஐ.ஏ.எஸ், நிதித்துறை (செலவுகள்) செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சகி தாமஸ் வைத்தியன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் இ.சரவணவேல் ராஜ் ஐ.ஏ.எஸ், புவியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவராக உள்ள சி.விஜயராஜ் ஐ.ஏ.எஸ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபபட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டி.அன்பழகன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் பிரஜேந்திர நவ்னிட் ஐ.ஏ.எஸ், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தனது விடுப்பு முடிந்து இப்பொறுப்பை ஏற்பார் என்றும், 16ஆவது நிதிக்குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் செயல்படுவார் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

Tags :
IAS officersShivdas MeenaTamilNadutransfer
Advertisement
Next Article