Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடரும் அவலம்...விழுப்புரம் அருகே சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதி!

01:20 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே புதுச்சேரி சாராயம் குடித்த 11 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி வந்து பலர் குடித்து வருகின்றனர். இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சனூர் அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி வந்து நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் குடித்துள்ளார்.

இதனையடுத்து சாராயத்தை குடித்த சக்திவேல் உள்ளிட்ட 6 பேருக்கும் நேற்று காலை உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சக்திவேல், காளிங்கராஜ், சுரேஷ்பாபு, ராஜா, பிரகாஷ், பிரபு உள்ளிட்ட 6 பேரும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சூழலில் அதே பகுதியை சேர்ந்த மேலும் 5 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சாராயம் குடித்து பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சாராயம் குடித்து 6 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
#Viluppuramby electionliquorPuducherry Drink
Advertisement
Next Article