10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இவர்களுக்கு செய்முறை தேர்வு மார்ச் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7ஆயிரத்து 557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4ஆயிரத்து 755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.
அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 வகுப்பு பொதுத் தேர்வினை 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25 ஆயிரத்து 888 தனித்தேர்ர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
இதனிடையே பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது. 11 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் மே மாதம் 19 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி 11 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி முன்கூட்டியே வெளியிடப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். இது குறித்த முறையான அறிவிப்புகள் இன்று அரசு தேர்வு துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும். மேலும் அரசுத் தேர்வுத்துறை இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.