Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உயிருக்கு போராடியவரை 1 கி.மீ தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்... குவியும் பாராட்டுகள்!

07:37 PM Nov 24, 2024 IST | Web Editor
Advertisement

திருப்பரங்குன்றத்தில் உயிருக்கு போராடிய நபரை, ஒரு கிமீ தூரத்திற்கு தூக்கி சென்று, மருத்துவமனையில் அனுமதித்த 108 அவசர கால ஊர்தி ஊழியர்களுக்கு பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில்வே நிலையத்தில், ஆண் ஒருவர் விஷம் அருந்தி மயக்க நிலையில் கிடப்பதாக, அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் 108 அவசர கால ஊர்தி ஓட்டுநர் ஹரி விக்னேஷ் மற்றும் மருத்துவ உதவியாளர் அன்புச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

வாகனம் உள்ளே செல்ல முடியாததால், ஆம்புலன்ஸை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஸ்ட்ரக்சரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த நபரை ஸ்ட்ரக்சரில் தூக்கிக் கொண்டு, மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில், விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாலா (45) என தெரியவந்தது. இவர் சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவசர நிலையை கருதி, 1 கிமீ தூரத்திற்கு நோயாளியை தூக்கிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், மருத்துவ உதவியாளருக்கும் அப்பகுதி மக்களை வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Advertisement
Next Article