Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும்" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
12:08 PM Feb 01, 2025 IST | Web Editor
Advertisement

2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இதையும் படியுங்கள் : “கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன்” – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த நிதியாண்டில், நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். மேலும், நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வசதி ஆகியவை அமைக்கப்படும் எனவும் மாணவர்களுக்கான பாடங்களைத் தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்கத் தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும் எனவும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொம்மைகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். அதனுடன் எஸ்சி/எஸ்டி பெண்களைத் தொழில் முனைவோர்களாக்க முதன்முறையாக புதிய திட்டம் தீட்டப்படும் என்று தெரிவித்தார்.

Tags :
மத்திய பட்ஜெட்மத்திய பட்ஜெட் 2025Budget 2025Budget2025Finance Ministernews7 tamilNews7 Tamil UpdatesNirmala sitharamanparliamentunion budgetUnion Budget 2025
Advertisement
Next Article