Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தமிழ்ப் புதல்வன்" திட்டத்தின்படி ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

12:46 PM Jun 14, 2024 IST | Web Editor
Advertisement

ஆகஸ்ட் மாதம் முதல் உயர்கல்வி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

Advertisement

பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "ஐம்பெரும் விழா"  இன்று நடைபெற்றது.  இதில் 2023 - 24ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி,  தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கி, அ ரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து,  நிகழ்ச்சி மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினர்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:

"பள்ளிக்கல்வித் துறை நிகழ்ச்சிகளில் பொதுவாகவே நான் ஆர்வத்துடன் கலந்து கொள்வது வழக்கம்.  இந்த விழாவில் கலந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இன்னும் சொல்ல வேண்டும் என்றால்,  பள்ளி மாணவர்களான உங்களை பார்க்கும் போது,  எனக்கும் இளமை திரும்பி ஆற்றல் வந்து விடுகிறது.  பொதுவாக,  அரசியல் மேடைகளில் தான் ஐம்பெரும் விழாக்கள்,  முப்பெரும் விழாக்களை நடத்துவோம்.  ஆனால்,  இப்போது பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இதையும் படியுங்கள் : ரூ.5 கோடி செலவில் புதுப்பொலிவு பெறும் ‘அம்மா உணவகங்கள்’ – மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.  புதுமைப் பெண் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.  'புதுமைப் பெண் திட்டம்' போல வரும் ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் செயல்படுத்தப்படும். கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.  பள்ளிக்கல்வித்துறை உலக தரத்தில் கொண்டு செல்ல அமைச்சர் அன்பில் முயற்சி மேற்கொண்டுள்ளார்"

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
"Tamilpputtalavan" schemeAugustCHIEF MINISTERCMOTamilNaduMKStalinstipendstudentsTamilNadu
Advertisement
Next Article