Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

1000 முதல்வர் மருந்தகங்கள் - இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

1000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
06:55 AM Feb 24, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இவ்விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக கடையையும்  பார்வையிடுகிறார்.

Advertisement

இதையும் படியுங்கள் : சாம்பியன்ஸ் ட்ராபி | கெத்து காட்டிய விராட் கோலி… பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

மேலும் பொதுமக்களிடம் மருந்தகம் தொடர்பாக உரை நிகழ்த்த உள்ளார். முதல்வர் மருந்தகங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 25% தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இன்று திறக்கப்பட உள்ள மருந்தகங்களின் பட்டியலில் குறிப்பாக சென்னையில் 33 இடங்களிலும், மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என திறக்கப்பட தயாராக உள்ளன. இந்த மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதேபோல முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50 சதவீத தொகையானது ரொக்கமாகவும், மீதம் அனைத்தும் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
முதல்வர் மருந்தகம்மருந்துகள்தள்ளுபடிCM MedicalDispensariesMedicalMK Stalin
Advertisement
Next Article