Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

10 வேளாண் பொருட்களுக்கு புவீசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

12:42 PM Feb 20, 2024 IST | Web Editor
Advertisement

வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடுப் பெற ரூ.30 லடசம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

Advertisement

தமிழ்நாடு 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து இன்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அதில் விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார்.

அப்போது அமைச்சரின் அறிவிப்பில்,  "புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை,  ஏற்றுமதி அளவு ஆகியன அதிகரிக்கும்.  எனவே, நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற கடந்த மூன்று ஆண்டுகளில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல்,  2024-2025-ஆம் ஆண்டில்

  1. சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு)
  2. கொல்லிமலை மிளகு (நாமக்கல்)
  3. மீனம்பூர் சீரக சம்பா (ராணிப்பேட்டை)
  4. அய்யம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்)
  5. உரிகம்புளி (கிருஷ்ணகிரி)
  6. புவனகிரி மிதி பாகற்காய் (கடலூர்)
  7. செஞ்சோளம்(சேலம், கரூர்)
  8. திருநெல்வேலி அவுரி இலை (திருநெல்வேலி)
  9. ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை (தேனி)
  10. செங்காந்தள் (கண்வலி) விதை (கரூர், திண்டுக்கல், திருப்பூர்) ஆகிய 10 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும்." எனத் தெரிவித்தார்.
Tags :
agricultureBudget 2024DMKEdappadi palanisamygeographical indicationMK StalinMRK PanneerselvamTamil Nadu Budget 2024TamilNaduTN Assembly 2024
Advertisement
Next Article