Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மார்ச் மாதத்தில் ரூ.1.78 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் - மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!

08:39 PM Apr 01, 2024 IST | Web Editor
Advertisement

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூல் எனவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த விவரங்களை மத்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளது. இது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டாவது அதிகபட்ச வசூலாகும். 2023-24-ம் நிதியாண்டுக்கான சராசரி மாதாந்திர மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்தது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024 மார்ச் மாதத்துக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் இரண்டாவது மிக உயர்ந்த வசூலாக ரூ.1.78 லட்சம் கோடி ஈட்டப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு 11.5% வளர்ச்சியுடன், உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து ஜிஎஸ்டி வசூல் 17.6% ஆக கணிசமாக உயர்ந்ததால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஜிஎஸ்டி வசூலில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஈட்டப்பட்டதே முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வருவாய் நிகர திரும்ப செலுத்தப்பட்ட தொகை (ரீஃபண்ட்) ரூ.1.65 லட்சம் கோடியாகும். இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 18.4 சதவீதம் அதிகமாகும்.

Tags :
Finance MinistryGood and Service TaxGSTINFORMATIONMarchNews7Tamilnews7TamilUpdatesrevenue
Advertisement
Next Article