தடைகளை எதிர்கொண்டு வெற்றி கண்ட நடிகர் சிவகார்த்திகேயன்...!
தனி ஒரு மனிதனாக தடைகளை எதிர்கொண்டு தகர்த்து அயலான் படத்தை வெளியிட்டு வெற்றி கண்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப்பிறகு ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது ஈர்ப்பு விசையில் இழுத்து வைத்திருக்கும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர்களால் வசூல் சக்ரவர்த்தி என்றும் ரசிகர்களால் கோலிவுட் பிரின்ஸ் என்றும் அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் ரஜினியைப்போலவே சினிமாவுக்கு வந்த ஓரிரு வருடங்களிலேயே மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்துக்குள் நுழைந்ததற்கு அவரது அசாத்திய திறமை மட்டுமே காரணம் அல்ல அவர் கடந்து சென்ற சோதனைகளும் அதை அவர் எதிர்கொண்ட விதமும்தான்.
முள்ளும் மலரும், ப்ரியா, பில்லா, ஜானி போல் சூப்பர்ஸ்டாருக்கு பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ போன்ற தொடர்வெற்றிகளை வசூல் சாதனை படங்களை தனது திரைபயணத்தின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து கொடுத்த ஒரே நடிகரும் இவர்தான். இந்த வெற்றிதான் அவருக்கு இந்த ஸ்டார் அந்தஸ்தை கொடுத்தது.
கூடவே நெருக்கடிகளையும், எதிரிகளையும் கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது, எப்படி ஆரம்பகாலத்தில் ரஜினி திரைத்துறைக்குள் வந்து வரலாற்று வெற்றிகளை முன்னணி நடிகர்கள் இருக்கும் போதே கொடுத்து நெருக்கடிகளையும், சிரமங்களையும் எதிர்கொண்டரோ அதே சூழலை சிவகார்த்திகேயனும் எதிர்கொண்டது காலம் புதிய புயலை திரைக்குள் புகுத்தியத்தாகவே அச்சம் கொண்டனர் ஆதிக்கம் செலுத்த விரும்பிய முன்ணணி நடிகர்கள்.
மெரினா, மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்காவில் கவனிக்க வைத்தவர், எதிர்நீச்சல் படத்தில் இருந்தே எதிர்த்து நீச்சல் அடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரலாற்று வெற்றி வந்தபோதே வில்லங்கம் வீடுகட்ட தொடங்கியது காக்கிசட்டை சாதாரணமாக வந்து வசூலில் பட்டையை கிளப்பியபோதே முன்ணணி நடிகரின் படத்தைவிட ஒப்பனிங் இருந்தது அந்த வில்லங்கத்தை விரிவாக்கியது.
அதுவரை அடுத்த சூப்பர்ஸ்டாருக்கு விவாதம் நடத்திய நடிகர்கள் சிலர் ரஜினி முருகனுக்கும், ரெமோவுக்கும் தடைகளை தங்களுக்கு சம்பந்தம் இல்லாத மாதிரியே ஏற்படுத்தினர். ரெமோ படம் வெளியாக அவர் மேடையிலேயே உணர்ச்சிவயப்பட்டார். அதுவே விமர்சனம் செய்யப்பட்டது. ஆனாலும் ஒரு தனி மனிதனாக இளைஞனாக எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் பொருளாதார பின்னணியும் இல்லாமல் இவ்வளவு நெருக்கடிக்குள்ளான ஒரே முன்னணி இளம் நடிகர் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
80 ஆண்டுகால தமிழ் சினிமாவில் இன்னும் சொல்வதென்றால் இந்திய சினிமாவிலேயே இவர் ஒருவராகத்தான் இருப்பார் என்பதை அறிய முடிகிறது. இந்த வருத்தத்தைகூட அவரால் பொதுவெளியில் சொல்ல முடியவில்லை.இதை பேசவும் எழுதவும் இங்கே யாருமில்லை இதைவிட பொருளாதார பின்னணி கொண்ட நடிகருக்கு இன்றுவரை கடந்த முப்பது வருடங்களாக கிடைத்துவரும் அனுதாபஅலையும் இவருக்கு ஊடகங்களிலும் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றது. மறைமுகமாக நவீன மகாபாரத போரையே இவர்மீது திணித்தனர் என்பது உருவகப்படுத்தப்பட்ட சொல்லாக இருந்தாலும் உவமைக்கு ஒப்பிட்டாலும் அது உண்மை தான்.
ரஜினி, கமல் போன்ற காலத்தை வென்ற நடிகர்கள் இவரை வியந்து ரசித்து கவனிக்க அடுத்தகட்ட பட்டியல் நடிகர்கள் அனைவருமே வயது வித்தியாசம் இல்லாமல் ஒன்றிணைந்தனர். இந்த பின்னணியில்லாத நடுத்தர குடும்பத்து பிள்ளையை வீழ்த்த, இவரை அறிமுகம் செய்த நடிகரின் வியாபார எல்லைகளை வெகு குறுகிய காலத்தில் குறிப்பாக ஓரிரு ஆண்டுகளிலேயே இவர் தாண்டியது, கால் நூற்றாண்டு கடந்து பெரும் செல்வாக்கை கொண்டிருந்த நடிகரின் ஓபனிங்கை சர்வசாதரணமாக தனது வெற்றியின்மூலம் வென்றது.
இரண்டு மூன்று தலைமுறையாக சினிமாவில் கோலேச்சிய குடும்பங்களின் வாரிசுகள் எதிர்நோக்கி காத்திருந்த இடத்தை காலம் இவருக்கு அடையாளம் காட்டியதை ஆண்டுக்கணக்கில் பட்டத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காத்திருந்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆதரவு எந்தவித ஊடக மற்றும் சமூக திணிப்பும் இல்லாமல் இயல்பாக ரஜினிக்கு கிடைத்தது போலவே இவருக்கும் கிடைத்தது.
இவரது போட்டியாளர்களை பார்வை திருப்பாமல் இவரை கண்காணிக்க வைத்தது.சமூக வலைதளங்களில் இவருக்கு சதிசெய்ய குழு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து பல வெற்றிகளுக்கு பின்பு வந்த சீமராஜாவுக்கு செக் வைக்கப்பட்டது . சின்னக்குழந்தைகள் முதல் சீரியஸ் பெரியவர்கள்வரை சிம்மாசனம் போட்டு அமர்ந்தது சீமராஜா
ஆனாலும் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் விமர்சனங்கள் மூலம் சீமராஜா இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் சூழல் வலிந்து உருவாக்கப்பட்டது.
இப்படி பொருளாதார சிக்கலிலும் முகம் காட்டாத புறமுதுகு காட்டும் புற எதிரிகளின் தொடர் தாக்குதலையும் மீறி டாக்டர், டான் என்கிற non-rajini இண்டஸ்ட்ரி ஹிட்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல்கிங் நான்தான் என்று தன் படங்களின் மூலம் பேசவைத்தார்.
அமைச்சர் உதயநிதி இவர் தான் தமிழ் சினிமாவின் வசூல் கிங் என்று மேடையிலேயே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் விடாது கருப்பு என்பது போல் கன்னித்தீவு சிந்துபாத் கதை போல் இவரை கடன்களும் சர்ச்சைகளும் சரியவைக்கும் என்றே கணித்தனர் இவரது சக போட்டியாளர்கள் அதற்கு மிக முக்கியமான காரணம். இவர் நண்பரின் தயாரிப்பில் மிகப்பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு தொடர் பிரச்னையில் சிக்கிய அயலான் படம் தான்.
இந்த படம் வெளி வருவதற்கு வாய்ப்பே இல்லை, அப்படியே தாமதமாக வந்தாலும் அது வெற்றி பெறாது என்கிற சூழ்நிலை இருந்தது. அதையும் இப்போது தனி ஒரு மனிதனாக எதிர்கொண்டு தடைகளை தகர்த்து அந்த படத்தை வெளியிட்டு வெற்றி கண்டது
சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய ஆச்சர்யத்தையும், எதிர் தரப்பினரை அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. இதற்கிடையே படத்தின் விமர்சனம் நன்றாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024-ம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு நல்ல தொடக்கமாகவே இருக்கும் என்றே தோன்றுகிறது ஆல் தி பெஸ்ட் அயலான் டீம்க்கும் சிவகார்த்திகேயனுக்கும்..