Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாம்பியன் குகேஷ்-க்கு நூதன முறையில் பாராட்டு!

06:18 PM Dec 14, 2024 IST | Web Editor
Advertisement

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றதால் குகேஷுக்கு நூதன முறையில் ஆழ்கடல் வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement

சிங்கப்பூரில் கடந்த 14 நாட்களாக நடந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி. இப்போட்டியின் இறுதிச்சுற்றில் சீன வீரர் டிங் லிரெனுக்கும் தமிழக வீரர் குகேஷுக்கும் விறுவிறுப்பாக போட்டி நடைப்பெற்றது. இதில் தமிழக செஸ் வீரர் குகேஷ் சீனா வீரர் டிங் லிரேனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். மிக குறைந்த வயதில் (18) உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குகேஷை குடியரசு தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர், புதுச்சேரி முதலமைச்சர் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதை பாராட்டும் விதமாக புதுச்சேரி மற்றும் சென்னையில் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் நடத்திவரும் அரவிந்த் என்பவர், தனது ஆழ்கடல் பயிற்சி வீரர்களான தாரகை ஆராதனா, தீபிகா, நிஸ்விக், தீனா லட்சுமணன் உள்ளிட்ட வீரர்களுடன் சென்னை நீலாங்கரை கடலில் 60 அடி ஆழத்தில் செஸ் விளையாட்டு விளையாடி குகேஷுக்கு நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags :
ChampionChampionshipChessCMGiftgugeshtalentTamilNadu
Advertisement
Next Article