எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள நிவாரணம்? தமிழ்நாடு அரசு விளக்கம்!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவவட்டங்களில் எந்தெந்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயலால் சென்னையில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : நாடாளுமன்ற தாக்குதல் | வெளியான பரபரப்பு வீடியோ!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையின்படி,
- மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களும் நிவாரணம்
- திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களுக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.