மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி : இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு..!
ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
05:06 PM Nov 02, 2025 IST | Web Editor
Advertisement
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30ல் தொடங்கியது.
Advertisement
இதில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிவில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தோல்வியடைந்ததை அடுத்து இந்தியா,தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
அதன் படி இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிபோட்டி இன்று நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடை பெறுகிறது.
மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவதில் சிரமம் ஏற்பட்டது. மழை நின்றவுடன் டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.