Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் - ஆனந்த குளியலிட குவியும் சுற்றுலா பயணிகள்!

10:12 AM Jun 30, 2024 IST | Web Editor
Advertisement

விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Advertisement

கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி போன்ற அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு கொட்டி வருகிறது. இந்த  தண்ணீரில் ஆனந்த குளியலிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்து வருகின்றனர்.

குறிப்பாக குற்றாலம் மெயின் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளநிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடாக பயணிகள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், அதுபோன்ற செயல்கள் நடைபெறாதவாறு தடுக்க வரிசையில் நிற்க வைக்கப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமான போலீஸாரும் குற்றாலம் பகுதியில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
Courtallam fallsRainSouthwest MonsoonTourists
Advertisement
Next Article