For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மூன்றாவது டி20 : இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா..!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 186 ரன்கள் குவித்துள்ளது.
03:54 PM Nov 02, 2025 IST | Web Editor
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 186 ரன்கள் குவித்துள்ளது.
மூன்றாவது டி20   இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
Advertisement

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2-1 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் டி20 போட்டிகள் துவங்கியுள்ளன.

Advertisement

அதன் படி இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக, டிம் டேவிட் 74 ரன்களும் ஸ்டாய்னிஸ் 64 ரன்களும் விளாசினர். இந்திய தரப்பில் அர்ஷதீப் சிங் 3 விக்கெட்களையும் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Tags :
Advertisement