Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இன்று விண்ணில் பாய்கிறது பாகுபலி ராக்கெட்!

பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்-3′ ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.
06:52 AM Nov 02, 2025 IST | Web Editor
பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்-3′ ராக்கெட் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது.
Advertisement

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஒரு சிறப்பு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள், ‘சி.எம்.எஸ்-03’ என்று அழைக்கப்படுகிறது.

Advertisement

பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்-3′ ராக்கெட் மூலம் 4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்’ என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03′ என்ற ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து செயற்கைக்கோளை திட்டமிட்ட இலக்கில் கொண்டு சேர்ப்பதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மாலை 5.26 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 24 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று மாலை ராக்கெட் விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
AndhraBahubali rocketISROSriharikota
Advertisement
Next Article