Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது

ஆவசம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது
06:00 PM Dec 07, 2025 IST | Web Editor
ஆவசம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது
Advertisement

தமிழ் சினிமாவின் முனன்ணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ரெட்ரோ. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 'கருப்பு' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதயடுத்து நடிகர் சூர்யா, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இதனிடையே சூர்யா மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆவசம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ‘சூர்யா 47’ என்று அழைக்கப்படும் இப்படத்தில் சூர்யா ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். மலையாள இளம் நடிகர் நஸ்லென், ஜான் விஜய், ஆனந்த் ராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார்.

ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் படத்தின் நாயகி நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்த்ராஜ், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில்  ஜோதிகா, நடிகர் கார்த்தி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசும் போது, "புதிய திரைத்துறை, புதிய ஆரம்பம், அதுவும் சூர்யா சார் போன்ற ஒரு பெரும் நட்சத்திரத்துடன் இணைவது எனக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. புதிதாக ஒன்றை முயற்சிக்கிறோம். நாங்கள் கொடுக்கவிருக்கும் இந்தப் புதுமையை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

Tags :
aveshamCinemaUpdateJithu MadhavanlatestNewsNazriya NazimSuryasurya47
Advertisement
Next Article