தென் தமிழகத்தில் மீண்டும் மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் டிச.27 முதல் வரும் ஜன. 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : விஜயகாந்த்திற்கு மணிமண்டபம் – தேமுதிக சார்பில் விரைவில் அமைக்க உள்ளதால் தகவல்.!
மேலும் வரும் டிச.31ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதி மற்றும் அதை ஒட்டி உள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் மேலும் அதிகரித்து மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த நாட்களில் மீன் பிடிக்க செல்ல செண்டாம் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.