Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து... சிறுமி உயிரிழப்பு! பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

08:28 PM Jan 01, 2025 IST | Web Editor
Advertisement

கேரளாவில் தனியார் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement

கேரள மாநிலம் கண்ணூர் அருகே குருமாத்தூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை வகுப்பு முடிந்து, மாணவர்கள் பள்ளி வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது கண்ணூர் அருகே வளகை பகுதியில் வந்து கொண்டிருந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

https://twitter.com/jsuryareddy/status/1874441322649800884

இந்த விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 15 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
AccidentKeralaSchool busstudents
Advertisement
Next Article