ஓடிடியில் வெளியானது பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’!
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து இவர் படங்களிலும் நடிக்க தொடங்கினார். அதன்படி, இவர் நடித்த ’லவ் டுடே’ மற்றும் ’டிராகன்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து, கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘டியூட்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளியை ஒட்டி கடந்த அக்.17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னதாக, இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை ஆக்கிரமித்தது. தொடர்ந்து, திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும், இப்படம் ரூ.100 கோடிக்கு அதிகமாக வசூலித்தது.
Oru kalyanam panna aayiram poi sollalaam, oru kalyanam pannama iruka aayiram poi solradha ipo dhaan paakuren 🤭🫣 pic.twitter.com/d8jZoVhuVW
— Netflix India South (@Netflix_INSouth) November 14, 2025
முன்னதாக இவர் நடித்த இரண்டு படங்களும் காதல் படமாக அமைந்த நிலையில் இப்படமும் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.