”பராசக்திக்காக பாடும் பவர்ஹவுஸ்” - ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட முக்கிய அப்டேட்...!
சிவகார்த்திகேயன்- சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் படம் ’பராசக்தி’. இப்படத்தில் இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிகின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜிவி இசையமைக்கும் 100 வது இதுவாகும். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலாக சமீபத்தில் வெளியான ’நெஞ்சாங்குழி’ பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரவி மோகனும் தனது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் பராசக்தி படத்தில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜி.வி பிரகாஷ் குமார் ”பராசக்திக்காக பாடும் பவர்ஹவுஸ்” என்று பதிவிட்டுள்ளார்.
