"உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்" - எடப்பாடி பழனிசாமி குழந்தைகள் தின வாழ்த்து!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
11:56 AM Nov 14, 2025 IST
|
Web Editor
Advertisement
ஜவஹர்லால் நேரு பிறந்தநாளான இன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "அன்பிற்குரிய தமிழகத்தின் செல்லக் குழந்தைகள் அனைவருக்கும் எனது இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.
Advertisement
அனைவருக்கும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவமும் , ஒளிமயமான எதிர்காலமும் ஒருங்கே அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் கனவுகள் பெரியதாக இருக்கட்டும்; அந்தக் கனவுகளை நிறைவேற்ற முயற்சி, சக்தி, துணிவு மூன்றும் துணை நிற்கட்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article