For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#JharkhandAssemblyElection | மீண்டும் முதலமைச்சராகிறாரா ஹேமந்த் சோரன்?

05:21 PM Nov 23, 2024 IST | Web Editor
 jharkhandassemblyelection   மீண்டும் முதலமைச்சராகிறாரா ஹேமந்த் சோரன்
Advertisement

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பர்ஹெத் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முன்னிலை பெற்றுள்ளார்.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, நவம்பர் 13 ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு நடந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 37 தொகுதிகளுக்கு 14,218 வாக்குச்சாவடிகளில், நவ.20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின. ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

இந்த தேர்தலில் பர்ஹெத் தொகுதியில், முக்தி மோர்ச்சா கட்சி வேட்பாளராக அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனும், பாஜக வேட்பாளராக கமாலியேல் ஹெம்ப்ரோம் களமிறங்கினர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ.23) எண்ணப்பட்டு வரும் நிலையில், ஹேமந்த் சோரன் 72,216 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் கமாலியேல் 45,358 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 26,858 ஆக உள்ளது. காண்டே தொகுதியில் பின்னடைவை சந்தித்த ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, 16வது சுற்று முடிவுபடி 92,482 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல, தும்கா தொகுதியில் ஹேமந்த் சோரன் சகோதரர் பசந்த் சோரன் 91,793 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

Advertisement