#JharkhandAssemblyElection | வெற்றியை தக்க வைத்த இந்தியா கூட்டணி!
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கும் தொடர்ந்து 2வது கட்டமாக, நவம்பர் 20ம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் 81 தொகுதிகளை கொண்ட நிலையில் பொரும்பான்கு
ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 41 இடங்கள் தேவை. இதில், ஆளும் இந்தியா கூட்டணி 56 இடங்களிலும், பாஜக கூட்டணி 24 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் ஜார்க்கண்ட்டில் ஜெஎம்எம் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது.
இந்தியா கூட்டணியில் ஹேமந்த் சோரனின் ஜெஎம்எம் 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ஆர்ஜேடி 4 இடங்களையும் கைப்பற்றுகின்றன. 2019 தேர்தலில் 25 இடங்களைக் கைப்பற்றிய பாஜக இம்முறை 21 இடங்களை மட்டுமே வசப்படுத்துகிறது.