”கல்விக்கடனின் வட்டியானது 10 சவீகிதத்திற்கும் அதிகமாக இருப்பது கவலைக்குரியது” - சு.வெங்கடேசன் பேட்டி!
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகள் துறை இணைந்து நடத்தும் கல்விக்கடன் முகாம் இன்று மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அரசு மற்றும் தனியார் வங்கிகள் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் மாணவ, மாணவியருக்கான கல்விக் கடன் தொடர்பான ஆலோசனைகள், தேவையான ஆவணங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சு.வெங்கடேசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் பேசியது,
”ஏழாவது கல்விக்கடன் மேளா தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையில் ஆண்டுதோறும் 100 கோடி வரையில் கல்வி கடன் வழங்கப்பட்டு வந்தது. இம்முறை 200 கோடி ரூபாய் வரையில் கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்து மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று ஒன்றிய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வராமல் இருந்து
வருகின்றனர்.
இது மாணவர்களுக்கு அநீதியாக பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக வீட்டுக் கடன், தொழில் கடன் உள்ளிட்டவைகளுக்கு 7 முதல் 8.5 சதவீதம் வரையில் வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் கல்விக் கடனுக்கு பத்து ஐந்து சதவீதம் வரையில் வட்டி நிர்ணயிப்பதும் மாணவர்களுக்கான அநிதியாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அரசு அரசுடைமை பாதுகாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே இதுவரையில் 90 சதவீதம் கல்விக்கு கடன் வழங்கியுள்ளது”
என்றார்.