GOLD RATE | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை ; இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
10:38 AM Dec 01, 2025 IST | Web Editor
Advertisement
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
Advertisement
இந்த நிலையில் டிசம்பர் மாதத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.196க்கும், ஒரு கிலோ ரூ.1,96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.