Gold Rate | தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம் என்ன?
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், சவரன் ரூ. 97ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.
அந்த வகையில், தங்கம் விலை நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 550-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 540-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ. 2 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.