For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“7வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும்” - கட்சி நிர்வாகிகளிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

09:28 PM Nov 09, 2024 IST | Web Editor
“7வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும்”   கட்சி நிர்வாகிகளிடையே முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரை
Advertisement

“அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருந்து விடக்கூடாது; 7வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும் என கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொள்ள விருதுநகர் சென்றுள்ளார். இன்று விருதுநகருக்கு சென்ற முதலமைச்சர் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சூலக்கரை பகுதியில் உள்ள காப்பகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து கட்சி வளர்ச்சி குறித்தும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதலமைச்சர்,

நாடாளுமன்ற தேர்தல் போல, சட்டமன்றத் தேர்தலிலும் 100% வெற்றியைப் பெற்று ஆட்சியமைப்போம் என நினைத்துக் கொண்டு அலட்சியமாகவும், மெத்தனமாகவும் இருந்து விடக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றுள்ளதை மக்களுக்கு உணர்த்தும்படி பிரச்சாரம் அமைய வேண்டும் என தெரிவித்தார்.

ஒவ்வொரு பெண் வாக்காளரையும் நேரில் சந்தித்து திட்டங்களை விளக்க வேண்டும். இளைஞர்கள் தான் எதிர்கால விதைகள். இளைஞர்கள் மற்றும் மகளிரை ஈர்க்கும் வகையில் பணியாற்றுங்கள். 7வது முறையாக திமுக ஆட்சி அமைய வேண்டும். விருதுநகரில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Tags :
Advertisement