Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக கைவிட வேண்டும்" - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
03:30 PM Oct 30, 2025 IST | Web Editor
பச்சைவாழியம்மன் கோவிலைக் கையகப்படுத்தும் திட்டத்தைத் திமுக அரசு கைவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு பச்சைவாழியம்மன் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையால் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்துப் போராடிய மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசின் ஏவல்துறை கைது செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

Advertisement

பல்லாண்டுகாலமாகப் பல சமுதாய மக்களின் குலதெய்வமாகத் திகழ்ந்து, நல்லமுறையில் பராமரிக்கப்படும் கோவிலைத் திடீரென அரசு கையகப்படுத்துவது ஏன் எனும் கேள்வி பக்தர்கள் மனதில் எழுந்துள்ளது. சொந்த அரசியல் ஆதாயத்திற்காகவும், கோவில் சொத்துகளை அபகரிப்பதற்காகவுமே இக்கோவில் ஆக்கிரமிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து அரசுத் தரப்பில் எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படாதது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

எனவே, பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக விளக்கமளித்துப் பக்தர்கள் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும். மேலும், திருக்கோவிலை ஆக்கிரமிக்கும் திட்டம் ஏதேனும் இருந்தால் அதனைக் கைவிட வேண்டும் எனத் திருக்கோவில் பக்தர்கள் சார்பாகவும் பாஜக சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BJPDMKNayinar NagendranPachaivazhiamman temple
Advertisement
Next Article