ரூ.70 கோடி வசூலை தாண்டிய துருவ் விக்ரமின் ‘பைசன்’!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன்’. இப்படத்தில் துருவ் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இப்படத்தை பார்த்த அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார்.
From his roots to glory 🏅
A glory that speaks for hundreds of thriving individuals 🔥#BisonKaalamaadan 💥🦬 Raging Success – Worldwide ₹70 crore gross 🦬#BlockBuster Raids in Theatres Near You!! 💥💥@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji… pic.twitter.com/0AXoOqxRpO— Mari Selvaraj (@mari_selvaraj) November 12, 2025
மேலும் மதிமுக பொதுச்செயளாலர் வைகொ, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி காந்த், இயக்குநர் வெற்றி மாறன் என்று பல்வேறு தரப்பினரும் படக்குழுவை வாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ.70 கோடிக்கும் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.