டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
டெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. திடீரென அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் சம்பவம் தற்கொலை படை தாக்குதலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, செங்கோட்டை 3 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.