For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லி வெடிவிபத்து : காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி...!

டெல்லி கார் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
04:05 PM Nov 12, 2025 IST | Web Editor
டெல்லி கார் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
டெல்லி வெடிவிபத்து   காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
Advertisement

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 20 திற்கும் மேற்பட்டோர் டெல்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் பூட்டான் அரசுப் பயணத்தையடுத்து நாடு திரும்பியுள்ள இந்திய பிரதமர் மோடி டெல்லி வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள  பதிவில்,

”டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement