மேட்டுப்பாளையம் சாலையில் பசுமை முயற்சியை தொடங்கிய 'டேனி ஷெல்டர்ஸ்'!
நகரப் பசுமையை அதிகரிக்கும் முயற்சியாக, டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம் தனது CSR பிரிவான சேயோன் அறக்கட்டளை மூலம் 'கானகம் திட்டம்' என்ற பெயரில் விரிவான மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை இன்று தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சங்காநூர் பாலம் முதல் துடியலூர் வரை மேட்டுப்பாளையம் சாலையில் 5,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், I.A.S, டேனி ஷெல்டர்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் சிவராமன் கந்தசாமி உடன் இணைந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், உள்ளூர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் டேனி ஷெல்டர்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் சிவராமன் கந்தசாமி பேசியதாவது,
“சேயோன் அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, எங்களின் நிறுவன சமூக பொறுப்பின் மீதான வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. கோயம்புத்தூரின் பசுமைப் பரப்பை அதிகரித்து, சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் நிலைத்த நகரமாக மாற்றுவதே கனகம் திட்டத்தின் நோக்கம். இதற்கு அனுமதி வழங்கி, தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் பவன் குமாருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது ஒரு சிறிய படியாக இருந்தாலும், பலரையும் ஊக்குவித்து, கோயம்புத்தூரை பசுமையாக்கும் பணியில் அனைவரையும் ஒன்றிணைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நகர்ப்புற சூழலில் வளரும் திறன் கொண்ட 5,000 உயர்தர மரக்கன்றுகள் தேர்ந்தெடுத்து நடப்படும். அவைகளை பராமரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். டேனி ஷெல்டர்ஸ், வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒன்றோடொன்று இணைந்து செல்லும் வகையில், தொடர்ந்து சூழலுக்கு உகந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
TANNY Shelters
கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட டேனி ஷெல்டர்ஸ், வாடிக்கையாளர்களுக்கான உயர்தர, நம்பகமான சேவைகளுக்குப் பெயர் பெற்ற முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம். இந்நிறுவனம் தனது அனைத்து பணிகளிலும் நிலைத்தன்மையை இணைக்கிறது. மேலும், அதன் CSR பிரிவான சேயோன் அறக்கட்டளை மூலம் பல சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கிறது.
சேயோன் அறக்கட்டளை
டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் CSR பிரிவான சேயோன் அறக்கட்டளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், கல்வி உதவி மற்றும் சமூக நலத் திட்டங்கள் போன்ற பல்வேறு முயற்சிகளின் மூலம் கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.