Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பீகார் சட்டமன்ற தேர்தல் | தேசிய ஜனநாயக கூட்டணி தற்போதுவரை 179 தொகுதிகளில் வெற்றி!

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை  179 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
09:28 PM Nov 14, 2025 IST | Web Editor
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை  179 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
Advertisement

பீகார் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில் இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவானது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்ததில் மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகியது.

Advertisement

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை  179 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 23 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.  இதனையடுத்து பீகாரில், மீண்டும் பாஜக ஜனதா தளம் கூட்டணி தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

Tags :
BiharBihar ElectionBihar Election 2025election resultnda
Advertisement
Next Article