பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் - பாஜக முன்னிலை!
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில் இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவானது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்ததில் மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகியது.
இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறு 46 மையங்களில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் தொடக்க நிலை வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் காலை 9 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 140 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 93 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணியில் 59 இடங்களுடன் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 9 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.