இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு!
10:18 AM May 27, 2024 IST
|
Web Editor
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.
Advertisement
இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Advertisement
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அதனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உச்சநீதிமன்ற கோடைவிடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Article