Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நவ.5 இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் நவ.5ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
08:00 PM Nov 01, 2025 IST | Web Editor
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் நவ.5ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் நவ.5ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

Advertisement

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 5.11.2025 புதன் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKAIADMKChennaiedappadi palaniswamiEPSLatest NewsTN News
Advertisement
Next Article