For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஷாருக்கனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல் ஹாசன்..!

நடிகர் கமல் ஹாசன் ஷாருக்கனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
07:48 PM Nov 02, 2025 IST | Web Editor
நடிகர் கமல் ஹாசன் ஷாருக்கனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஷாருக்கனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல் ஹாசன்
Advertisement

பாலிவுட் முண்ணனி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டாரக வலம் ஷாருக்கான் இந்தி மட்டுமின்றி தமிழ் நன்கு பரிட்சையமானவர். இவர் கமல் ஹாசன் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ஹே ராம் படத்தில் நடித்திருந்தார். மேலும் இவரின் ஹாப்பி டிவாலி, சென்னை எக்ஸ்ப்ரஸ், பதான் போன்ற படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது.

Advertisement

அத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமா இயக்குநரான அட்லி குமார் இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.

தற்போது ஷாருக்கான்   ‘வார் மற்றும் பதான்’ ஆகிய படங்களை இயக்கிய  சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இன்று ஷாருக்கான் இன்று தனது 60 அவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவரின் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் ஷாருக்கனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேமரா, வசீகரம், புத்திசாலித்தனத்துடன் கிரீடம் தேவையற்ற ராஜாவுக்கு அவரின் இதயத்தைப்போல பிரம்மாண்ட பிறந்த நாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement