3 வது டி20 போட்டி : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெறுகிறது.
07:16 AM Nov 02, 2025 IST | Web Editor
Advertisement
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனிடையே கான்பெர்ராவில் நடந்த முதல் போட்டியின் போது மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
Advertisement
இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெறுகிறது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிக் கணக்கை தொடங்க இந்திய அணி எல்லா வகையிலும் போராடும். இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.